ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 18 மே 2023 (11:11 IST)

கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம்: ஆளுநர் மாளிகை நோக்கி எடப்பாடி பழனிசாமி பேரணி

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி நடத்தப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் உயிரிழந்த விவகாரத்தில் இதுவரை எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வழக்குகள் கொலை வழக்குகளாக மாற்றப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். 
 
இந்த நிலையில் கள்ளச்சாராயம் விவகாரத்தில் அதிமுக கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வரும் 22ஆம் தேதி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்த போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக ஆளுநரை சந்தித்து உரிய விசாரணை நடத்துமாறு கவர்னர் இடம் எடப்பாடி பழனிச்சாமி புகார் மனு வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன அந்த புள்ளி
 
Edited by Mahendran