Daily Horoscope
✕

தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஈபிஎஸ்-ஓபிஎஸ்!

Written By siva
Updated: வெள்ளி, 30 அக்டோபர் 2020 (07:56 IST)
தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஈபிஎஸ்-ஓபிஎஸ்!
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30-ஆம் தேதி அரசியல் கட்சி தலைவர்கள் கொண்டாடி வருவது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த முறை இன்னும் ஒரு சில மாதத்தில் தேர்தல் வரவிருப்பதால் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய கட்சி தலைவர்களும் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர் 
 
அந்த வகையில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி குருபூஜையை ஒட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 
முத்துராமலிங்க தேவரின் 113 வது ஜெயந்தி மற்றும் 58 வது குருபூஜையை அடுத்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் இந்த மரியாதை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

எல்லாம் காட்டு

ரிசர்வ் வங்கியின் ஆக்கபூர்வமான நடவடிக்கை.. இந்திய ரூபாய் மதிப்பு சூப்பராக உயர்வு...

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய தகவல்...

தவெகவில் இணைகிறாரா நடிகை கஸ்தூரி? அவரே அளித்த விளக்கம்..

இந்த வெற்றிக்கு விஜய் மட்டுமே காரணம்!. சத்யபாமா, மரகதம் குமரவேல் நெகிழ்ச்சி..

நீங்கள் தானே ஆளுநர் பதவியை ஆட்டுத்தாடியுடன் ஒப்பிட்டீர்கள்.. அன்பில் மகேஸ் வழக்கில் நீதிபதி கேள்வி..

அடுத்த கட்டுரையில்
Show comments