திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 11 ஜூலை 2016 (13:38 IST)

இனிதே நிறைவு! - விக்ரம் மகள், கருணாநிதியின் கொள்ளுப்பேரன் நிச்சயதார்த்தம்

நடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷிதாவுக்கும், திமுக தலைவர் கருணாநிதியின் கொள்ளுப்பேரனும், கெவின்கேர் நிறுவனத்தைச் சேர்ந்த சி.கே.ரங்கநாதனின் மகனுமான மனு ரஞ்சித்திற்கும் நிச்சயதார்த்தம் இனிதே நிறைவடைந்தது.
 

 
நேற்று ஞாயிறு அன்று (ஜூலை 10ம் தேதி) சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷிதாவுக்கும், திமுக தலைவர் கருணாநிதியின் கொள்ளுப்பேரனும், மு.க.முத்து-சிவகாம சுந்தரியின் மகள் வழிப்பேரனும், கெவின்கேர் நிறுவனத்தைச் சேர்ந்த சி.கே.ரங்கநாதனின் மகனுமான மனு ரஞ்சித்திற்கும் நிச்சயதார்த்தம் இனிதே நிறைவடைந்தது.
 
இதில் கருணாநிதி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இவ்விழாவில் திரையுலகைச் சார்ந்த பிரபலங்கள் கலந்து கொள்ளவில்லை. இருவரின் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டனர். ஆனால், இயக்குநர் பாலா, ஷங்கர் உள்ளிட்ட அவருக்கு நெருக்கமான சினிமா நண்பர்கள் சிலர் மட்டுமே கலந்துகொண்டனர்.