1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 18 நவம்பர் 2024 (13:16 IST)

டேட்டிங் ஆப் பழக்கம்.. உல்லாசமாக இருந்துவிட்டு கம்பி நீட்டிய காதலன்! - இளம்பெண் பரபரப்பு புகார்!

abuse

கர்நாடகாவில் டேட்டிங் ஆப் மூலம் பழகிய இளைஞரை இளம்பெண் சந்தித்த நிலையில் அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி இளைஞர் ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் இளைஞர்கள், இளம்பெண்கள் சமூக வலைதளங்கள், செயலிகள் மூலமாக பேசி பழகி காதலிப்பது சாதாரணமான ஒன்றாகியுள்ளது. ஆனால் இதை வாய்ப்பாக பயன்படுத்தி சிலர் ஏமாற்றும் மோசடி சம்பவங்களும் நடக்கவே செய்கிறது. அப்படியான ஒரு சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

 

கர்நாடகாவின் மடிவாளா பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் டேட்டிங் செயலி ஒன்றின் மூலமாக நிகால் உசேன் என்ற நபருடன் பேசி வந்துள்ளார். இருவருக்கும் இடையே நெருங்கிய பழக்கம் ஏற்பட்ட நிலையில் காதலாக மலர்ந்துள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்வதாக முடிவு செய்த நிலையில் ஒருநாள் உசேன், இளம்பெண்ணை ஓட்டல் ஒன்றிற்கு அழைத்துள்ளார்.
 

 

அங்கு சென்ற இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து உசேன் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இளம்பெண் கர்ப்பமான நிலையில் அவரை கர்ப்பத்தை கலைக்க சொல்லி வற்புறுத்தியும் உள்ளார். ஆனால் அதற்கு பிறகு இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியுள்ளார்.

 

இதுகுறித்து இளம்பெண் போலீஸில் புகார் அளித்த நிலையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், தலைமறைவான உசேனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Edit by Prasanth.K