திமுக எம்பி ஜெகத்ரட்சகன் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை.. பெரும் பரபரப்பு..!
இன்று காலை முதல், அமலாக்கத்துறை அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியான நிலையில், திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவனங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்ற தகவல் திமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தியாகராய நகரில் உள்ள, தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகனின் அக்கார்ட் டிஸ்டில்லர்ஸ் அண்ட் பிரேவர்ஸ் என்ற மதுபான நிறுவன அலுவலகத்தில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
அது மட்டுமல்ல, எஸ்.என்.ஜே குரூப்பின் மதுபான நிறுவன அலுவலகத்திலும், எழும்பூரில் டாஸ்மாக் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. டாஸ்மாக் ஊழல் தொடர்பாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒரே நாளில், அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர்களின் வீடுகளிலும், திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றிருப்பது, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva