1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 28 ஜூலை 2023 (10:13 IST)

திமுக அரசுக்கு முடிவுரை எழுத முதல் அடி: நடைப்பயணம் குறித்து அண்ணாமலை..!

திமுக அரசுக்கு முடிவுரை எழுத முதல் அடி ராமேஸ்வரத்தில் இருந்து எடுத்து வைப்போம் என  நடைப்பயணம் குறித்து அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை வரை நடை பயணம் செய்ய உள்ள நிலையில் இந்த நடைபயணத்தை மத்திய அமைச்சர்  அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளார் என்பதும் கூட்டணி கட்சி தலைவர்களும் இதில் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த நடைபயணம் குறித்து அண்ணாமலை தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
 
இன்று, புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தில் தொடங்கவிருக்கும் என் மண் என் மக்கள் நடைப்பயணத்தில் பங்கு பெறவிருக்கும் என் அன்பு தமிழக பாஜக  சொந்தங்களையும், பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி  அவர்களின் மக்கள் நலத்திட்டத்தால் பயன் பெற்ற பயனாளிகளையும், பொது மக்களையும் சந்திக்க மிக ஆவலுடன் உள்ளோம்! 
 
ஊழலில் ஊறித்திளைக்கும் திமுக அரசுக்கு முடிவுரை எழுத, இராமேஸ்வரத்தில் முதல் அடியை எடுத்து வைப்போம்! 
 
Edited by Mahendran