வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (17:35 IST)

வேட்புமனு தாக்கல் முடிந்தது: அடுத்தது தீவிர பிரச்சாரம்!

பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கடந்த 30ஆம் தேதி முதல் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன
 
இந்த நிலையில் இன்று மாலை 5 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது என அதிகாரபூர்வமாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது 
 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் தீவிரப்படுத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள், 490 ஊராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது
 
1374 மாநகராட்சி கவுன்சிலர்,3843 நகராட்சி கவுன்சிலர், 7621 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12,838 பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது