பிப்ரவரி 17ஆம் தேதி பிரச்சாரத்தை நிறுத்த வேண்டும்: தேர்தல் ஆணையம் உத்தரவு!
தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பிப்ரவரி 17ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே நாளில் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தற்போது பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது
ந்த நிலையில் பிப்ரவரி 19ஆம் தேதிக்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் அதாவது பிப்ரவரி 17ஆம் தேதி 6 மணிக்குள் தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்தி விட வேண்டும் என்றும் அதன் பின்னர் தேர்தல் பிரச்சாரம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
தேர்தல் பிரச்சாரம், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் ஆகிய அனைத்தும் பிப்ரவரி 17ஆம் தேதி மாலை 6 மணிக்கு நிறுத்துவதை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தேர்தல் ஆணையர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது