திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 26 ஜூலை 2016 (08:15 IST)

ராம்குமாரிடம் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.


 
 
ஏற்கனவே ராம்குமாரை காவல்துறை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையின் போது ராம்குமார் சுவாதியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாகவும், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதியை எப்படி கொலை செய்தான் என்பதை நடித்துக்காட்டியதாகவும் தகவல்கள் வெளியானது.
 
இந்நிலையில் மீண்டும் ராம்குமாரை போலீஸ் காவலில் எடுத்து, வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள காவல்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.