திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 29 டிசம்பர் 2020 (08:59 IST)

பசங்கதான் புக்க எடைக்கு போடுவாங்க.. நீங்களுமா? – பள்ளிக்கல்வி அதிகாரி, இரும்புக்கடைக்காரர் கைது!

மயிலாடுதுறையில் அரசின் இலவச பள்ளி பாட புத்தகங்களை பள்ளிக்கல்வித்துறை அதிகாரியே எடைக்கு போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமாக பள்ளி இறுதி தேர்வு முடிந்துவிட்டால் பள்ளி மாணவர்கள் தங்கள் புத்தகத்தை பழைய இரும்பு கடையில் எடைக்கு போடுவார்கள். ஆனால் சமீப காலமாக அப்படியான பழக்கங்களும் போய் இளைய மாணவர்களுக்கு அதை படிக்க கொடுத்து விடுவதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஆனால் மயிலாடுதுறையை சேர்ந்த மாவட்ட கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் மேகநாதன் மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய அரசின் இலவச பாடப்புத்தகங்களை பழைய இரும்பு கடையில் எடைக்கு போட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் கிலோ கணக்கில் அல்ல.. டன் கணக்கில்..

1 முதல் 12 வரை உள்ள வகுப்புகளுக்கான சுமார் 3,134 புத்தகங்களை பழைய இரும்பு கடையில் போட்டிருக்கிறார். இதுகுறித்து அறிந்த மேலதிகாரிகள் மேகநாதனை சஸ்பெண்ட் செய்து கைதும் செய்துள்ளதோடு, பழைய இரும்புக்கடைக்காரர் பெருமாளையும் கைது செய்துள்ளனர்.