15 நாட்களில் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் - எடப்பாடிக்கு ஆளுநர் உத்தரவு
எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக அறிவித்துள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவ், இன்னும் 15 நாட்களில் அவர் தனது பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக, சசிகலா தரப்பில் முதல்வராக நியமிக்கபட்ட எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், அவர் இன்னும் 15 நாட்களில் தனது பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு ஓ.பி.எஸ் தரப்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது..