புதன், 4 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 6 நவம்பர் 2024 (13:31 IST)

திமுக, பாஜக தவிர மற்ற கட்சிகளை விமர்சிக்க வேண்டாம்: அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ்

திமுக, பாஜக தவிர மற்ற கட்சிகளை விமர்சனம் செய்ய வேண்டாம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கூட்டணி தொடர்பாக மாவட்டச் செயலாளர்களின் கூட்டத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு இந்த கருத்தை மறைமுகமாக பேசி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

2026 சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து எப்போது வேண்டுமானாலும் முடிவு செய்யலாம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திமுக, பாஜகவை தவிர்த்து மற்ற கட்சிகளை உபசரிக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகளிடம் அதிமுக மறைமுகமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், புதிதாக கட்சி ஆரம்பித்த விஜய் உடனும்  கூட்டணி பேச்சு நடந்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

எடப்பாடி பழனிசாமி இந்த அறிவுறுத்தலின் மூலம் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது


Edited by Mahendran