வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 13 செப்டம்பர் 2021 (12:52 IST)

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை அதிமுக ஆதரிக்கும் - எடப்பாடி பழனிச்சாமி!

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் சட்ட மசோதாவை அதிமுக ஆதரிக்கும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 
 
நேற்று நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடந்தது. இந்நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நீட் தேர்வு அச்சம் காரணமாக தனுஷ் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இதனிடையே முதல்வர் ஸ்டாலின், எனும் பலிபீடத்தில் மற்றுமொரு மரணம்! கல்வியால் தகுதி வரட்டும். தகுதி பெற்றால் மட்டுமே கல்வி எனும் அநீதி நீட் ஒழியட்டும். நாளை நீட் நிரந்தர விலக்கு சட்ட மசோதா கொண்டு வருவோம் என நேற்று கூறியிருந்தார். 
 
அதன்படி நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் சட்ட மசோதா இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  ஆம், நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விலக்கு கோரி பேரவையில் மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை அதிமுக ஆதரிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.