புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 1 பிப்ரவரி 2021 (16:38 IST)

எனது கோரிக்கையை ஏற்று பட்ஜெட்டில் அதை இணைத்ததற்கு நன்றி! – முதல்வர் பழனிசாமி

மத்திய அரசின் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் மனநிறைவு அளிக்கும் விதமாக பட்ஜெட் இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மருத்துவம், பொருளாதார, தொழில் முதலீடு, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான பட்ஜெட் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பட்ஜெட் தாக்கல் குறித்து பேசியுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ”மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு உகந்த பல அறிவிப்புகள் உள்ளன. நெடுஞ்சாலைகளை மேம்படுத்த ரூ.1.05 லட்சம் கோடி ஒதுக்கீடு தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை தூண்டும். எனது கோரிக்கையை ஏற்று ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது மன நிறைவை தருகிறது” என குறிப்பிட்டுள்ளார்

மேலும் கொரோனா தடுப்பூசிகளுக்கு ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளதற்கு நன்றி தெரிவித்துள்ள முதல்வர் மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகளுக்காக 50% நிதியை விடுவிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளார்.