Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயப்படதீங்க இன்னும் 2 -3 நாள் தான்... தைரியம் சொல்லும் ஈபிஎஸ்!!

Written By Sugapriya Prakash
Updated: வியாழன், 16 ஏப்ரல் 2020 (15:16 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்தியாவிலேயே தமிழகம்தான் முன்னெச்சரிக்கையாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். 
 
சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது அவர் பேசியது பின்வருமாறு, கொரோனா நோய் தடுப்பு பணிக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மத்திய அரசு ஊரடங்கை அறிவிக்கும் முன்னரே தமிழக அரசு அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டு ஊரடங்கை நீட்டித்துவிட்டது. 
 
அரசின் தீவிர நடவடிக்கையால் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகம் தான் முன்னெச்சரிக்கையாக மருத்துவ உபகரணங்களை வாங்கி வைத்துள்ளது. இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவிடும். 
 
ஊரடங்கால் தமிழகத்தில் காய்கறிகள் விலை உயர்ந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கூறுவது தவறு. ஏழை, எளிய மக்கள் வாங்கும் அளவுக்கு காய்கறிகளின் விலையை அரசு கட்டுப்படுத்தியுள்ளது. துவரம் பருப்பு 500 மெட்ரிக் டன், மிளகு, கடுகு, சீரகம், வெந்தயம் 100 மெட்ரிக்டன் கொள்முதல் செய்து விலை உயர்வு தடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். 

எல்லாம் காட்டு

இரண்டடுக்கு ரஷ்ய ரயிலின் வித்தியாசமான அனுபவம்: இந்திய பெண் பயணி பகிர்ந்த வீடியோ வைரல்

50 நாட்களில் 4 முறை இடமாற்றம்: மனவேதனையை வெளிப்படுத்திய பெண் ஐஏஎஸ் அதிகாரி

ஈஃபிள் கோபுரத்தில் இந்து பெண் ஊழியர்கள் தவிர்க்கப்படுகிறார்களா? : இந்து அமைப்பின் போராட்டத்தால் சர்ச்சை..

இவன் அடிப்படை அறிவு இல்லாதவன்.. யாரை சொல்கிறார் ஜேம்ஸ் வசந்தன்?....

ஞாயிறு Low BP.. நேத்து High BP.. சட்டசபையில் புலம்பிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்!..

அடுத்த கட்டுரையில்
Show comments