திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (12:53 IST)

எத்தனை வழக்கு போட்டாலும் சட்டரீதியாக வெல்வோம்: எடப்பாடி பழனிசாமி

Edappadi
எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை சட்டரீதியாக வெல்வோம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
இன்று காலை முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது/ இந்த நிலையில் இந்த சோதனை குறித்து கருத்து தெரிவித்த எதிர்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது;
 
மின்கட்டண உயர்வால் அரசின் மீது ஏற்பட்டிருக்கும் மக்கள் எதிர்ப்பை லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மூலம் திசை திருப்ப நினைக்கும் இந்த திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் செயலை கண்டித்து,ஜனநாயக முறையில் கேள்வி எழுப்பிய கோவை மாவட்ட கழக சட்டமன்ற உறுப்பினர்கள் 7பேரையும்,கழக தொண்டர்களையும் சர்வாதிகார போக்குடன் கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிப்பதுடன், கைது செய்யப்பட்டுள்ள அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்.