வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 22 அக்டோபர் 2023 (14:18 IST)

அதிமுகவை பார்த்து திமுகவுக்கு பயம் வந்துவிட்டது: எடப்பாடி பழனிசாமி

அதிமுகவை பார்த்து திமுகவுக்கு பயம் வந்துவிட்டது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு எந்த பிரச்சனையும் வரவில்லை என்றும் அதிமுகவில் ஜாதி கிடையாது, ஆண் ஜாதி பெண் ஜாதி என்ற இரண்டு தான் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இஸ்லாமியர்களுக்கு தேவையான அனைத்தும் செய்தது அதிமுக தான் என்றும் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே வந்ததும் திமுகவுக்கு பயம் வந்துவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

 மேலும் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் வைப்பது, ஆனால் கட்சியின் கொள்கை என்பது நிலையானது என்றும், அதிமுக ஒன்றும் பாஜகவின் பீ டீம் கிடையாது என்றும் நாங்கள் தான் ஒரிஜினல் ஏ டீம் என்றும் தெரிவித்தார்.

பாஜக அமைச்சரவையில் இருந்த போதே கருத்து வேறுபாடு ஏற்பட அதை தூக்கி எறிந்த கட்சி அதிமுக மட்டுமே என்றும் அவர் பெயர் கூறியுள்ளார்.

Edited by Siva