திமுக ஆட்சி இருக்கும் வரை மக்களுக்கு மனநிறைவு இல்லை: எடப்பாடி பழனிசாமி
திமுக ஆட்சியில் இருக்கும் வரை மக்கள் மன நிறைவுடன் இருக்க மாட்டார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து பிரச்சாரம் செய்து வருகிறார்/ இந்த நிலையில் திமுக ஆட்சியில் இருக்கும் வரை மக்கள் மனநிறைவை அடைய மாட்டார்கள் என பிரச்சார மேடை ஒன்றில் கூறினார்
அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் கனவை நான்தான் நிறைவேற்றினேன் என்றும் ஆனால் இந்த பெருமை மக்களையே சாரும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்