அதிமுகவில் 1 லட்சம் பழனிசாமி இருக்கிறார்கள்; திருமண விழாவில் ஆவேசமாக பேசிய ஈபிஎஸ்..!
அதிமுகவில் ஒரு லட்சம் பழனிச்சாமிகள் இருக்கிறார்கள் என்றும் நான் இல்லாவிட்டால் இன்னொரு தொண்டர் இந்த கட்சியை வழிநடத்துவார் என்றும் திருமண விழாவில் எடப்பாடி பழனிச்சாமி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி ஐம்பது ஆண்டுகால காவேரி பிரச்சனைக்கு தீர்வு கண்டது அதிமுக அரசுதான் என்றும் டெல்டா விவசாயிகள் பாதுகாக்கப்பட்டது அதிமுக அரசில் தான் என்று தெரிவித்தார்
அதிமுகவில் ஒரு லட்சம் பழனிச்சாமிகள் உள்ளனர் என்றால் இந்த பழனிச்சாமி இல்லை என்றால் யாராவது ஒரு பழனிசாமி கட்சியை வழிநடத்துவார் என்றும் ஒன்றை கோடி தொண்டர்களை கொண்ட கட்சி இது என்றும் தெரிவித்தார்.
மேலும் அதிமுகவை யாராலும் தொட்டு பார்க்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் டெல்டா விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 24 மணி நேர மும்மூனை மின்சாரம் வழங்கியது அதிமுக அரசுதான் என்றும் திமுக அரசில் மும்முனை மின்சாரம் வழங்க நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்
Edited by Mahendran