தொண்டனுக்கு கோவம் வரும், அடிக்கத்தான் செய்வான்: சர்காரை எதிர்த்து பொங்கும் சர்கார்
விஜய் நடித்து முருகதாஸ் இயக்கியுள்ள சர்கார் படத்தில் அரசு திட்டமான இலவசங்களை விமர்சிப்பது போன்ற காட்சி ஒன்று இடம்பெற்றது. இந்த காட்சிக்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த காட்சி படத்தில் இருந்து நீக்கப்பட்டது.
இந்நிலையில் இத்தனை நாள் இது குறித்து பேசாமல் இருந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பிரச்சனை முடிந்த பிறகு இது பற்றி பேசியுள்ளார். அப்போது அவர் கூறியது பின்வருமாறு,
சர்கார் பிரச்னை சுமுகமாக முடிந்துவிட்டது. மேலும் மேலும் இதைபெற்றி பேசி பெரிதுபடுத்த வேண்டாம். தலைவனின் திட்டங்களை விமர்சனம் செய்தால் அவனது தொண்டர்களுக்கு கோபம் வரத்தான் செய்யும்.
இவர்கள் எல்லாம் கோடி கோடியாக செலவு செய்து படம் எடுக்கிறார்கள். அவர்களுக்கு எப்படி அந்த பணம் வந்தது என எனக்கு தெரியவில்லை? ரூ.100 டிக்கெட்டை ரூ.1000க்கு விற்று ரசிகர்களின் ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள்.
இலவசம் வேண்டாம் என்றால் கல்வியும் விலை இல்லாமல் இலவசமாகத்தான் தருகிறோம். இதனால் படிக்காமல் இருந்து விட முடியுமா என்ன? என எடப்பாடி பழனிசாமி கேள்வி கேட்டுள்ளார்.