திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (13:35 IST)

நான் ஒரு மூத்த குடிமகன்.. நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி

எனக்கு 70 வயதாகிவிட்டது, நான் ஒரு மூத்த குடிமகன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் என்பதால் வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என இன்று நடந்த திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணையில் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜரான எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
 
மேலும் தான் உடல்நலக்கோளாறால் பாதிக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் மருந்துகளை எடுத்துவருவதாகவும், வழக்கை தாமதப்படுத்தும் நோக்கம் இல்லை என்றும், எனவே நேரில் ஆஜராக விலக்கு அளிக்க கோருகிறேன் எனவும் எடப்பாடி பழனிசாமி தனது மனுவில் கோரியுள்ளார்.
 
முன்னதாக மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, மத்திய சென்னை எம்.பி  தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை’ என பேசியிருந்தார்.
 
எடப்பாடியின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், அவருக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள். மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. 
 
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது  முன்பு எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராகி, மனுவை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Edited by Mahendran