திமுக ஆட்சி வரும்போதெல்லாம் காவலர்களின் கைகள் கட்டப்படும்: எடப்பாடி பழனிசாமி
திமுக ஆட்சி வரும் போதெல்லாம் காவலர்களின் கைகள் கட்டப்பட்டு இருக்கும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த சில நாட்களாக திமுகவை கடுமையாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்து வருகிறார் என்பதும் அந்த வகையில் இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்த போது தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சி வருகிறதோ அப்போதெல்லாம் காவலர்களின் கைகள் கட்டப்பட்டு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கதவுகள் திறக்கப்படுகின்றன என்று தெரிவித்தார்
மேலும் சட்டம் ஒழுங்கை காக்க காவல்துறையை சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். பட்டபகலில் தலைநகரில் காவல் நிலையம் எதிரே படுகொலை நடந்து உள்ளது என்றும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுக்கு இதுவே மிகச் சிறந்த எடுத்துக்காட்டு என்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran