திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 16 நவம்பர் 2022 (15:17 IST)

250 வழக்குகளில் துப்பு துலக்கிய மோப்ப நாய் மரணம்~!

simba
வேலூர் மாவட்ட காவல்துறையில்  பல முக்கிய வழக்குககில் துப்பு துலக்க உதவியாக இருந்த  மோப்ப நாய்  உயிரிழந்தது.

வேலூர் மாவட்ட காவல்துறையில்  மோப்ப நாய் பிரிவில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை கொலை, கொள்ளை  உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் துப்பு துலக்க உதவியாக இருந்த நாய் சிம்பா.

இந்த மோப்பா நாய் இதுவரை 250 க்கும் அதிகமான கொலை, கொள்ளை வழக்குகளில் துப்பு துவக்க உதவியாய் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில  மாதங்களுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்ட இந்த சிம்பா சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதற்கு புற்று நோய் பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், சிகிச்சைபலனின்றி சிம்பா நேற்று இறந்ததாக காவல்துறை வட்டாரம் ததெரிவித்துள்ளது.

சிம்பாவின் உடலை அங்குள்ள கட்டிய வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

Edited by Sinoj