வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 21 ஜனவரி 2020 (19:51 IST)

”திரைப்படங்கள் பார்த்தால் குழந்தைகள் கெட்டுவிடும்”.. முதல்வர் பழனிசாமி

இப்போது வெளிவருகிற திரைப்படங்களை பார்த்தால் குழந்தைகள் கெட்டுப்போகும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அதில், “திரைப்படங்கள் மூலம் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை சமுதாயத்தில் புகுத்தியவர் எம்.ஜி.ஆர். இப்போதெல்லாம் ஏதேதோ தலைப்புகளில் திரைப்படம் வெளிவருகிறது. ஒரு படம் கூட மனதில் நிற்பதில்லை” என கூறினார்.

மேலும், “இப்போது வெளிவருகிற திரைப்படங்களை பார்த்தால் குழந்தைகள் கெட்டுவிடும்” எனவும் கூறியுள்ளார்.