அயோத்தியில் ராமர் கோயில் – பிரதமருக்கு தமிழக முதல்வர் வாழ்த்து!
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட இன்று அடிக்கல் நாட்டப்படுவதை தொடர்ந்து அதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக பிரச்சினையில் இருந்து வந்த அயோத்தி விவகராம் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. அதையடுத்து அயோத்தியில்ல் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் கோலகலமாய் தொடங்கியுள்ளன. இன்று நடைபெறும் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்துக்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேற்றுவதற்காக பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.