1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 13 அக்டோபர் 2023 (08:48 IST)

லாட்டரி மார்டின் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக சோதனை.. அமலாக்கத்துறை அதிரடி..!

martin
லாட்டரி அதிபர் மார்டின் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக சோதனை தொடர்ந்து வருகிறது. 
 
கோவையில் மார்டின் வீடு, அலுவலகம் மற்றும் கல்லூரிகளில் வருமானவரி துறையினர் சோதனை செய்து வரும் நிலையில் சென்னை, போயஸ் தோட்டத்தில் உள்ள மார்டின் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். ஒரே நேரத்தில் வருமானவரி துறையினர் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை போயஸ் கார்டனில் உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் மற்றும் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். 
 
அதேபோல் கடந்த மே மாதம் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இந்த நிலையில் தற்போது மீண்டும் சோதனை நடத்தப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஏற்கனவே ஜி ஸ்கொயர், செந்தில்பாலாஜி, பொன்முடி , ஜெகத் இரட்சகன் , ஆகியோர்களது இல்லங்களில் சோதனை தற்பொது லாட்டரி மார்டின் வீட்டிலும் சோதனை நடைபெறுவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
 
Edited by Siva