வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (16:27 IST)

முன்னாள் டிஜிபி ஜாபர் சேட் மீதான ED வழக்கு.! ரத்து உத்தரவை திரும்பப் பெற்ற உயர் நீதிமன்றம்..!!

Zazfar Chet
ஓய்வு பெற்ற டிஜிபி ஜாபர் சேட் மீது அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை நேற்று ரத்து செய்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று திரும்பப் பெற்றது.
 
2006-2011 திமுக ஆட்சி காலத்தில், சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டுமனையை முறைகேடாகப் பெற்றதாக ஓய்வு பெற்ற காவல் துறை டிஜிபி ஜாபர் சேட், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை 2011-ம் ஆண்டு ஊழல் வழக்கை பதிவு செய்தது. 
 
இந்த வழக்கின் அடிப்படையில், சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் ஜாபர் சேட் மீது அமலாக்கத் துறை 2020- ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.   இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஜாபர் சேட் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.  தன் மீதான வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.சிவஞானம் அமர்வு, ஜாபர் சேட்டுக்கு எதிரான ஊழல் வழக்கை உயர்நீதிமன்றம் ஏற்கனவே ரத்து செய்துள்ளதால் அதன் அடிப்படையில் அமலாக்கதுறை பதிவு செய்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடியாது எனக் கூறி அவருக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

 
இந்நிலையில் ஜாபர் சாதிக் மீதான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று திரும்பப் பெற்றது. வழக்கின் விளக்கங்களை பெற விசாரணையை ஆகஸ்ட் 27-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.