செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (15:37 IST)

மக்களவைத் தேர்தல் எதிரொலி..! வண்டலூர் பூங்காவிற்கு விடுமுறை..!!

Vandallor Zoo
மக்களவை தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி வண்டலூர் பூங்காவிற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மக்களவைத் தேர்தல் 2024, ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினமே தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
 
வாக்கு பதிவு நாளன்று தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட அரசு மற்றும் அனைத்து தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மீறினால் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

 
இந்நிலையில் மக்களவை தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி வண்டலூர் பூங்கா மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் வாக்குகள் செலுத்துவதற்கு ஏதுவாக அன்றைய தினம் வண்டலூர் பூங்காவிற்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.