திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (10:11 IST)

திருச்சி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

புகழ் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் உள்ளூர் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் போது விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. 
 
நேற்று கூட சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையிலும் தஞ்சாவூரிலும் உள்ளூர் விடுமுறை குறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வெளியிட்டார்கள் என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் இன்று திருச்சி மாவட்டத்தில் புகழ் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ளதை அடுத்து இன்று உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியாளர் பிரதீப் குமார் என்பவர் அறிவித்துள்ளார் 
 
இந்த நிலையில் இன்றைய விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் ஜூன் 8-ம் தேதி வேலைநாளாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து இன்று உள்ளூர் விடுமுறை என்பதால் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சமயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருவதை அடுத்து விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு  திருவிழாவை காண பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran