வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 29 மே 2024 (14:39 IST)

மோடி வருகை எதிரொலி..! 42 மீனவ கிராமங்களில் போலீசார் குவிப்பு - உச்சகட்ட பாதுகாப்பு..!

Modi
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரி  மாவட்ட கடலோர பகுதிகளில் உள்ள 42 மீனவ கிராமங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
 
இந்நிலையில் பிரதமர் மோடி நாளை (வியாழக்கிழமை) கன்னியாகுமரிக்கு வர உள்ளார். அங்குள்ள விவேகானந்தர் பாறைக்கு சென்று தியான மண்டபத்தில் 3 நாட்கள் தியானம் மேற்கொள்ள உள்ளார். 
 
பிரதமரின் வருகையை முன்னிட்டு, கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.  மேலும், கன்னியாகுமரி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
மேலும், கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர காவல் படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். நாளை முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை மூன்று நாட்களும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் கன்னியாகுமரி  மாவட்ட கடலோர பகுதிகளில் உள்ள 42 மீனவ கிராமங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 


விவேகானந்தர் மண்டபத்தில் சுகாதாரத்துறை மற்றும் மருத்துவத்துறை ஊழியர்களும் தேவையான ஏற்பாடுகளை செய்து வைத்துள்ளனர்.