சாயப்பட்டறை அதிபர்களின் பிடியில் மீண்டும் கரூர்!

புதன், 1 ஆகஸ்ட் 2018 (18:39 IST)
ஏற்கனவே, ஆற்றில் சாயப்பட்டறை தண்ணீரை ஆற்றில் கலந்து விட்ட நிலையில், தற்போதே தடுப்பணையிலேயே சாயக்கழிவு நீரை கலந்து முற்றிலும் குடிநீர் மற்றும் விவசாய நீரை விஷ நீராக மாற்றியுள்ளனர் சாயப்பட்டறை அதிபர்கள்.
 
கரூரில் உள்ள செட்டிபாளையம் தடுப்பணையில் சாயக்கழிவு நீர் கலந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சாயக்கழிவு பாசனத்திற்கும் குடிநீருக்குமான நீரை நாசம் செய்ததால் ஊரை காலிசெய்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. 
 
கரூரை அடுத்த செட்டிபாளையம் பகுதியில் அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் அண்மையில் அமராவதி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் வந்து சேர்ந்தது. 
 
ஏற்கனவே சாயக்கழிவு நீரை, பற்றி கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகத்தால், சாயப்பட்டறை உரிமையாளர்கள் அப்படியே சாயபட்டறை தண்ணீரை ஆற்றில் திறந்து விட்டுள்ளனர். 
 
இந்நிலையில், தற்போது, அந்த விஷ கழிவு நீரை இதே பகுதியில் உள்ள தடுப்பணையில் உள்ள நீரிலும் மர்ம நபர்கள் கலக்க விட்டுள்ளனர். இதனால் அணையில் உள்ள நீர் முழுவதும் பச்சை நிறத்தில் காணப்படுகிறது.
 
இச்சம்பவம் குறித்து அறிந்த கரூர் மாசுகட்டுபாட்டு அதிகாரிகள் செட்டிபாளையம் அணைக்கு வந்து அணையில் உள்ள நீரை சேகரித்து பரிசோதனைக்கு எடுத்து சென்றுள்ளனர். 
 
இந்த பிரச்சனைக்கு நடவடிக்கை எடுக்குமா? கரூர் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டுமென்கின்றனர் நடுநிலையாளர்கள்.
 

எல்லாம் காட்டு

அரசுக் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. முக்கிய அறிவிப்பு..!

ஒருவழியாக தமிழகத்திற்கு டிஜிபி நியமனம்.. ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால்.. யார் இவர்?

திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையின் அவலம்.. 2023ல் கட்டப்பட்ட பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து..!

என் குழந்தை கலைந்து போனதுக்கு விஜய் சார்தான் காரணம்!.. பிக்பாஸ் ஜூலி அழுகை!...

நீங்க டைம் எடுத்து கத்துக்கிற வரை தமிழ்நாடு தாங்காது சி.எம்.சார்!.. உதயநிதி கோபம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments