ஜஸ்ட் எஸ்கேப் ஆன துரைமுருகன்… குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!
திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் 796 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
திமுகவின் மூத்த அரசியல்வாதியாக அறியப்படும் துரைமுருகன், தற்போதைய நிலையில் அதிகமுறை சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட நபராக அறியப்படுகிறார். இதுவரை ராணிபேட்டை மற்றும் காட்பாடியில் 10 முறை போட்டியிட்டுள்ள அவர் இரண்டு முறை மட்டும் தோல்வி அடைந்துள்ளார். இதையடுத்து மீண்டும் இந்த முறை அவர் தனது சொந்த தொகுதியிலேயே போட்டியிட்டார். கிட்டத்தட்ட வெற்றி உறுதி என்று சொல்லப்படும் வேட்பாளர்களில் அவரும் ஒருவராக இருந்தார்.
ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக அவர் ஆரம்பம் முதலே பின்னணியில் இருந்தார். இதனால் ஒரு கட்டத்தில் அவர் தோற்பது உறுதி என்று கூட சொல்லப்பட்டது. ஆனால் அதன் பின்னர் அவர் வாக்குகள் அதிகம் பெற்று வெறும் 796 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.