1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (13:46 IST)

ஸ்டாலின் நீ அதிர்ஷ்டசாலி : துரைமுருகன் நெகிழ்ச்சி

திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற மேடையில் துரைமுருகன் பேசியது திமுகவினரை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 
திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலினும், பொருளாலர் பதவிக்கு துரைமுருகனும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவராக ஸ்டாலினும், பொருளாலராக துரைமுருகனும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
 
அந்த விழாவில் பேசிய துரைமுருகன் “ஸ்டாலினை தம்பி என அழைத்து கொண்டிருந்தேன். தற்போது தலைவர் என அழைக்கிறேன். 1962ம் ஆண்டு முதன் முதலில் நான் ஸ்டாலினை பார்த்த போது அரைக்கால் சட்டையும், குட்டி பனியனும் போட்டுக்கொண்டு இருப்பார். எங்களை பார்த்ததும் உள்ளே ஓடிவிடுவார். அதன் பின் வளர்ந்து தோழனாகி, இன்று கட்சியின் தலைவர் ஆகியுள்ளர்.
 
தலைவர் பதவி கருணாநிதிக்கு எளிதாக கிடைக்கவில்லை. கட்சியிலேயே பலத்த எதிர்ப்புகள் இருந்தது. பல போராட்டங்களை தாண்டியா அந்த பதவியை கருணநிதி அடைந்தார். ஆனால், ஸ்டாலின் அதிர்ஷ்டசாலி. அதேபோல், எம்.ஜி.ஆர், பேராசிரியர் அன்பழகன், ஸ்டாலின் வகித்த பொருளாலர் பதவி தனக்கு கிடைத்துள்ளது என அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.