திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் எப்படி இருக்கிறார்?
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நிலை சீராக உள்ளது என குரோம்பேட்டை மருத்துவமனை அறிக்கை.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. துரைமுருகன் 2 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நிலை சீராக உள்ளது என குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனை அறிக்கை அளித்துள்ளது. கவலைப்படும் வகையில் துரைமுருகன் உடல்நிலை இல்லை எனவும், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் எனவும் கூறியுள்ளது.