திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 6 செப்டம்பர் 2023 (12:26 IST)

சனாதனம் கலாச்சாரம் வேறு, இந்து மதம் வேறு; மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ

சனாதனம் கலாச்சாரம் வேறு, இந்து மதம் வேறு என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது:
 
இந்து மதம் என்பது ஒரு வாழ்வியல் முறை, இந்து மதத்திற்கு எதிரானவர்கள் திராவிடர்கள் அல்ல. இந்து மதத்தை திரித்து, சாதிகளை உருவாக்கி மக்களிடையே ஒரு பிரிவினையை உருவாக்கியுள்ளார்கள்
 
சனாதனத்தில் உள்ள சில விசயங்களை திருத்த வேண்டும் என்று தான் கூறி வருகிறோம், ஆனால் வேண்டுமென்றே சனாதனம் பிரச்னையை திசை திருப்பி வருகிறார்கள்
 
பாரத் என்கிற வார்த்தை வருவதற்கு முன் இந்தியா என்ற சொல்தான் இருந்தது, மதம், சாதி, இந்தியா என்ற பிரச்னை இப்போது தேவையா? இந்தியா கூட்டணியில் சில குழப்பங்களை செய்யவே ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் விஷயத்தை பேசி வருகிறார்கள் என  மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran