புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 23 டிசம்பர் 2021 (20:02 IST)

ஒமிக்ரான் வைரஸ் பரவல் எதிரொலி: பள்ளிகள் மீண்டும் மூடப்படுகிறதா?

தமிழகத்திலும் ஒமிக்ரான் வைரஸ் படிப்படியாக அதிகரித்து வருவதை அடுத்து மீண்டும் பள்ளிகள் மூடப்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை ஒரே ஒரு ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட நபர் மட்டுமே இருந்த நிலையில் நேற்று திடீரென முப்பத்தி மூன்று பேர்கள் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் பள்ளியை தொடர்ந்து செயல்படுவது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை செய்வார் என்றும் அந்த ஆலோசனைக்கு பின்னரே பள்ளிகள் தொடர்ந்து செயல்படுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது