திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 29 மே 2020 (19:56 IST)

ஆளுநர் மாளிகையில் பணியில் இருந்த பெண் டி.எஸ்.பி.க்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் இன்று அதிகபட்சமாக தமிழகத்தில் 874 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பாக சென்னையில் 618 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் தமிழக ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்த 44 வயதான பெண் டிஎஸ்பி ஒருவருக்கும் கொரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கவர்னர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்த 44 வயது பெண் டிஎஸ்பி ஒருவருக்கு சமீபத்தில் கொரோனா அறிகுறி இருந்ததாகவும் இதனை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும், தகவல்கள் வெளிவந்துள்ளன. பல்லாவரத்தை சேர்ந்த அவர் தற்போது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்றும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. கவர்னர் மாளிகையில் பணிபுரிந்த டிஎஸ்பி ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது