ஞாயிறு, 23 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 28 செப்டம்பர் 2016 (18:45 IST)

டாஸ்மாக் லாரியை கடத்த முயன்ற குடிமகன்கள்

சென்னையில் இருந்து ராமநாதபுரத்திற்கு சென்ற டாஸ்மாக் லாரி பெரம்பலூர் அருகே பஞ்சராகி நின்றது. அப்போது அதிலிருந்து மதுபாட்டில்களை டெம்போ ஒன்றில் ஏற்றி கடத்த முயற்சி செய்துள்ளனர்.


 

 
சென்னையில் இருந்து ராமநாதபுரத்திற்கு டாஸ்மாக் லாரி ஒன்று மதுபாட்டில்களை ஏற்றிச் சென்றுள்ளது. பெரம்பலூர் அருகே சென்ற போது லாரி பஞ்சர் ஆனது. 
 
இதனால் லாரி சாலையோரமாக நிறுதப்பட்டிருந்தது. இதைக்கண்ட மர்ம குமபல் ஒன்று டெம்போ மூலம் மதுபாட்டில்களை கடத்த முயற்சி செய்துள்ளனர். லாரியில் இருந்து மதுபாட்டில்களை டெம்போவில் ஏற்றிக் கொண்டிருக்கும் போது திடீரென அந்த வழியில் காவல்துறையினர் வந்துள்ளனர்.
 
காவல்துறையினரை கண்டவுடன் மர்ம நபர்கள் அனைவரும் தப்பி ஒடினர். காவல்துறை வரவில்லை என்றால் லாரியில் இருந்த ஒட்டுமொத்த மதுபாட்டில்களையும் கடத்திருப்பார்கள்.