Daily Horoscope
✕

ஓடும் பேருந்தில் உயிரிழந்த டிரைவர்.. உயிர்தப்பிய பயணிகள்

Updated: வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (13:53 IST)
ஓடும் பேருந்தில் மாரடைப்பு ஏற்பட்டதால் டிரைவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தனியிலிருந்து அரக்கோணத்திற்கு சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தை தேவதாஸ் என்னும் 50 வயது முதியவர் ஓட்டிக்கொண்டிருந்தார். அந்த பேருந்தில் 40 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் திடீரென டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதனால் சில விநாடிகள் தாறுமாறாக பேருந்து ஓடியது. பேருந்தை ஒரு வழியாக கட்டுக்குள் கொண்டுவந்த டிரைவர் தேவதாஸ் பேருந்தை பிரேக் அடித்து நிறுத்தி மயங்கி விழுந்தார்.

பின்பு பேருந்து பயணிகள் உடனடியாக டிரைவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தேவதாஸ் இறந்துவிட்டதாக கூறினர். தான் உயிரிழக்கும் நிலையிலும் 40 பேரின் உயிரை காப்பாற்றிய டிரைவரின் செயல், பெரும் பரிதாபத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments