வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 7 செப்டம்பர் 2024 (10:21 IST)

அதிரடியாக குறைந்த தங்கம் விலை.! இன்றைய விலை நிலவரம்.!!

Gold
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.53,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
தங்கம் விலை கடந்த ஜூலை மாதம் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகவும், பிளாட்டினத்திற்கான இறக்குமதி வரி 12 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது.
 
பட்ஜெட் எதிரொலியாக கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. இதனால் நகை பிரியர்கள் மற்றும் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதையடுத்து கடந்த 2ம் தேதி முதல் நேற்று வரை தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில்,  நேற்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்தது.

 
இந்நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.53,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.6,680-க்கு விற்பனையாகிறது.