"சிங்கத்தை" சிதைத்த ஜெயலலிதா?
"சிங்கத்தை" சிதைத்த ஜெயலலிதா?
அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத் தலைவர் டாக்டர் சேதுராமனுக்கு முதல்வர் ஜெயலலிதா அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.
தமிழக சட்டசபைக்கு கடந்த மே 16 ஆம் தேதி வாக்குபதிவு நடைபெற்று, மே 19 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 134 இடத்தில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியைப்பிடித்தது. முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். அவரை அடுத்து அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
சட்டமன்றத் தேர்தலின் போது, அதிமுக கூட்டணியில் இருந்த டாக்டர் சேதுரமன், சீட் பங்கீடு விவகாரத்தில் கூட்டணியை விட்டு வெளியேறி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் தேசிய மறுமலர்ச்சி இயக்கம், நேதாஜி சுபாஷ் சேனை, மறத்தமிழர் சேனை உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து "சிங்கம்" கூட்டணியை அமைத்தார். ஆனால், எதிர்பார்த்தபடி இந்த கூட்டணி தென்மாவட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இந்த நிலையில், டாக்டர் சேதுராமன் குடும்பத்திற்கு சொந்தமான, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் டாக்டராகப் பணியாற்றி வரும், டாக்டர் நான்சி சிந்தியா என்பவரை ஆங்கிலோ இந்தியன் எம்எல்ஏ -வாக தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. இதனால் டாக்டர் சேதுராமன் கடும் எரிச்சலில் உள்ளார்.