Daily Horoscope
✕

பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ: அதிமுகவில் இணைந்ததால் பரபரப்பு!

Written By Mahendran
Updated: புதன், 4 ஜனவரி 2023 (11:32 IST)
பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ மருத்துவர் சரவணன் திடீரென அதிமுகவில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில மாதங்களாகவே எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது என்பது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் முன்னாள் எம்எல்ஏ மருத்துவர் சரவணன் திடீரென பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகினார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது.
 
இந்த நிலையில் தற்போது அவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவில் இணைந்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ’முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இணைந்துள்ளேன். அதிமுகவின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்’ என்று தெரிவித்துள்ளார். 
 
நேற்று பாஜகவிலிருந்து காயத்ரி ரகுராம் விலகிய நிலையில் இன்று சரவணன் விலகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

ராதிகா வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் மகன் வெட்டிக்கொலை..

தமிழகம் முழுவதும் சட்ட ஆலோசகர்கள் - தனுஷின் அடுத்த மூவ்

இந்தியாவை சூறையாடிய 'அர்னாப்' புயல்: செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியீடு!

ஐடிபிஐ வங்கி விவகாரத்தில் ராகுல் காந்தியின் பொய்கள் விரைவில் அம்பலமாகும்: நிர்மலா சீதாராமன்

கண்ணில் செடி முளைத்து இலையும் வளர்ந்த அதிசயம்... கண்ணீர் தான் அந்த செடிக்கு உணவாம்...

அடுத்த கட்டுரையில்
Show comments