குமாரசாமியின் யோசனை நயவஞ்சகமானது: பாமக ராம்தாஸ்

திங்கள், 21 மே 2018 (12:16 IST)
கடந்த பல ஆண்டுகளாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையிலான காவிரி பிரச்சனை தற்போதுதான் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பின்னர் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக தற்போது காவிரி மேலாண்மை  ஆணையம் அமைக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஆணையத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு அதிக அதிகாரம் இருக்கும் என்றும், தண்ணீர் திறந்துவிடும் முடிவை இந்த ஆணையம் மட்டுமே எடுக்க முடியும் என்றும் கூறப்படுவதால் கிட்டத்தட்ட காவிரி பிரச்சனைக்கு முடிவு கிடைத்துவிட்டதாக கருதப்படுகிறது.
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்கவுள்ள குமாரசாமி காவிரி பிரச்சனையை இருமாநில முதல்வர்கள் மற்றும் அதிகாரிகள் பேசி தீர்க்க வேண்டும் என்று யோசனை கூறியுள்ளார். 
 
இதுகுறித்து கருத்து கூறிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், 'காவிரி பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்ற குமாரசாமியின் யோசனை நயவஞ்சகமானது என்றும், இந்த யோசனை காவிரி பிரச்சினையை மேலும் சிக்கலாக்கிவிடும் என்றும் அவர் தமிழக எச்சரிக்கைக்கு விடுத்துள்ளார். 

எல்லாம் காட்டு

திடீரென அரசு மருத்துவமனைக்கு விசிட் அடித்த முதல்வர் விஜய்!. வைரல் போட்டோ...

செந்தில் பாலாஜி, அசோக் குமாருக்கு முன் ஜாமீன்!.. தவெகவுக்கு பின்னடைவு!...

தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை: சிறுவனின் ஆணுறுப்பு அகற்றம், மருத்துவர்களின் ஆடியோவால் பரபரப்பு

சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு.. என்ன நடந்தது?

திமுக - தவெக கூட்டணி: திருமாவளவனின் அதிரடி பேட்டியால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments