புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Modified: செவ்வாய், 21 பிப்ரவரி 2017 (11:13 IST)

சசிகலாவை சென்னை சிறைக்கு மாற்றும் முயற்சிக்கு பாமக எதிர்ப்பு

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் உள்ளார். அவரது ஆதரவாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி தமிழகத்தில் அமைந்துள்ளதால் சசிகலா பெங்களூரில் சிறையில் உள்ள தன்னை சென்னை சிறைக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளாராம். சர்க்கரை வியாதி உள்ளிட்ட காரணங்களால் அவர் சென்னை சிறைக்கு மாற்றக்கோரியதாக தகவல்கள் கூறுகின்றன.


 

சட்டப்பட்டி இருமாநில ஜெயிலர்களும் ஒப்புக்கொண்டால் சசிகலாவை சென்னை சிறைக்கு மாற்ற எந்த தடையும் இல்லை என்றாலும் யாராவது நீதிமன்றத்தில் முறையிட்டால் சிக்கல் ஏற்படும்.

இந்நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பக்கத்தில், சசிகலா சென்னை சிறைக்கு மாற்றக்கோரியதாக செய்திகள் வருகின்றன. இதனை அனுமதிக்க முடியாது. இதை எதிர்த்து பாமக உச்ச நீதிமன்றத்தை நாடும் என்று பதிவிட்டுள்ளார்.