வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 21 பிப்ரவரி 2019 (16:11 IST)

மனைவி மீது சந்தேகம்...நள்ளிரவில் சம்மட்டியால் அடித்துக் கொலை

சேலம் மாவட்டத்தில் தன் மனைவி மீது சந்தேகம் கொண்ட கணவர்  நள்ளிரவில் சம்மட்டியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியில் காந்தி நகரில் வசித்து வருபவர் காளியப்பன். இவருக்கு சாந்தா என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு திருமணமாகி தனியே வசிக்கின்றனர்.
 
இந்நிலையில் அருகில் எல்லோருடனும் சகஜமாக பழகும் சுபாபமுள்ள சாந்தா மீது கணவர் காளியப்பன் சந்தேகம் கொண்டுள்ளார். இதனால் வீட்டில் அடிக்கடி சண்டை வலுத்துள்ளது.
 
நேற்று வழக்கம் போல குடிபோதையில் வீட்டுக்கு வந்த காளியப்பன், சாந்தா தூங்கிக் கொண்டிருக்கும் போது அவரை சம்மட்டியால் அடித்து கொலை செய்து விட்டார்.சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
 
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ்ச இடத்திற்கு விரைந்து வந்து சாந்தாவில் உடலை மீட்டு உடற்கூறு சோதனைகாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இக்கொலை சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் காளியப்பனை தேடி வருவதாக தகவல் வெளியாகின்றன.