ஊரடங்கு முடிவுக்கு வருமா ? மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை !
கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் மூன்றாவது கட்டமாக மேலும் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், இந்த ஊரடங்கு காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.
இந்நிலையில், ஊரடங்கு தளர்வால் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்யவும், பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி 5 வது முறையாக இன்று ஆலோசனை செய்து வருவதாகத் தகவல்; வெளியாகிறது.
இந்த ஆலோசனையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுள்ளதாகவும், வரும் மே-17ந் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஆலோசனை ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.