திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வியாழன், 23 ஜூலை 2020 (16:32 IST)

மோடி அரசின் துரோகத்தை ஆதரிக்கிறீர்களா? – ரஜினியிடம் கேள்வி எழுப்பிய எம்பி

கரூர்.நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணு தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்திடம், நீங்கள் மோடி அரசின் துரோகத்தைஆதரிக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து எம்பி ஜோதிமணி தனது டுவிட்டர் பக்கத்தில், திரு. ரஜினிகாந்த் அவர்களே தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்படோர் 70% இந்திய அளவில் 52% அவர்களின் இடஒதுக்கீட்டை ரத்து செய்திருப்பதன் முலம் லட்சக்கணக்கான மாணவர்களின் மருத்து கனவில் மண் அள்ளிப்போட்டிருக்கிறது பிஜேபி அரௌ. அவ்வப்போது கருத்து சொல்லியே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ள உங்களுக்கு இதுபற்றி கருத்து இல்லையா ? அல்லது மோடி அரசின் துரோகத்தை ஆதரிக்கிறீர்களா என ரஜினிகாந்திடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.