வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (13:39 IST)

நமக்கு சிந்திக்கும் திறன் உள்ளதா? அரசியல் அறிவு உள்ளதா? சீமான் கேள்வி..!!

Seeman
துன்பத்தைத் தந்தவருக்கே மீண்டும் அதிகாரத்தைக் கொடுப்பதால் நமக்கு சிந்திக்கும் திறன் உள்ளதா? அரசியல் அறிவு உள்ளதா? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
 
சென்னை, அண்ணா சாலையில் நடந்த மின் வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் சீமான் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். அப்போது பேசிய அவர், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்தார்.

தி.மு.க., ஆட்சியில் 3வது முறையாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அரசுப் பள்ளிகளில் 300 மாணவிகள் படிக்கும் இடத்தில் 2 கழிவறைகள் தான் உள்ளன என்றும் அவர் கூறினார். ஆனால், பல நூறு கோடியில் சமாதி கட்டப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
 
மேலும் பல கோடி ரூபாய் செலவு செய்து, கார் பந்தயம் தேவையா? என்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்திவிட்டு மாணவர்களுக்கும், மகளிருக்கும் ரூ.1,000 கொடுக்கிறார்கள் என்றும் சீமான் விமர்சித்தார். துன்பத்தைத் தந்தவருக்கே மீண்டும் அதிகாரத்தைக் கொடுப்பதால் நமக்கு சிந்திக்கும் திறன் உள்ளதா? அரசியல் அறிவு உள்ளதா? என்ற கேள்வி எழுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
 
போக்குவரத்து ஊழியர்கள், ஆசிரியர்கள், வேளாண் குடிமக்கள் என அனைத்து தரப்பிலும் போராட்டம் நடத்தப்படுகிறது என்று தெரிவித்த சீமான், எல்லோருமே போராடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் விமர்சித்தார். 

 
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களை அமைச்சர்கள் வரிசையாக போய் பார்த்தார்கள் என்றும் ஆனால் மீனவர் ஒருவர் உயிரிழப்பது குறித்து எந்த அமைச்சரும் பேசக் கூட இல்லை என்றும் சீமான் ஆதங்கம் தெரிவித்தார்.