வெள்ளி, 28 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 28 மார்ச் 2025 (16:55 IST)

திமுகவால் செட் செய்யப்பட்டவர் தான் அண்ணாமலை: ஆதவ் அர்ஜூனா

Aadhav arjuna
திமுக ஆதரவாளர்கள், எதிர்க்கட்சிகளை அவர்களுக்கே சாதகமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக, தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கடுமையாக விமர்சித்துள்ளார்.
 
சென்னையில் திருவான்மியூரில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது.  இதில் உரையாற்றிய ஆதவ் அர்ஜுனா கூறியதாவது:
 
எதிர்க்கட்சிகளை எப்படி ஒடுக்க வேண்டும்? அவர்களின் தலைவர்களை எவ்வாறு சந்தேகத்திற்கு உள்ளாக்கலாம்? தவெகவுக்கு எதிராக பொய்ப் பிரசாரம் செய்ய என்ன வழிகள்? – இவையெல்லாம் திமுக தீவிரமாக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இந்தப் பயணத்தில் அவர்கள் தங்கள் முதல் வெற்றியாக அண்ணாமலையை கைப்பற்றியிருக்கிறார்கள்.
 
டெல்லியில் அமர்ந்து பிற மாநிலங்களில் பாஜகவுக்கு ஆதரவை திரட்டும் மோடி, ஒருபுறம் “செட்” வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால், தமிழகத்தில் திமுகவே அண்ணாமலையை செட் செய்துவிட்டது!
 
ஒரு அமைதியாக இருக்கும் புலியை தூண்டிவிடும் மந்தமாக இருக்கும் ஆடுகளாக திமுக செயல்படுகிறது. நாங்கள் மக்களின் உரிமைக்காக, ஜனநாயகத்திற்காக போராடிக்கொண்டிருக்க, அண்ணாமலை சட்டையை கழற்றி, சாட்டையால் தன்னைத் தாக்கிக்கொள்கிறார்!
 
இன்றுவரை பெரியார், அம்பேத்கர் சிலைகள் அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்படவில்லை. தமிழகத்தின் உள்துறை அமைச்சராக முதல்வர் செயல் நிர்வாகம் சரியில்லை. சட்டமன்றத்தில் ஜனநாயகத்தின் குரலை முடக்கிவிடுகிறார்கள். எதிர்க்கட்சியினர் பேசினால், உடனே நேரடி ஒளிபரப்பை நிறுத்தி விடுகிறார்கள்.
 
திமுகவும் பாஜகவும் வெளிப்படையாக எதிரிகள் போல் நடிக்க, மறைமுகமாக இணைந்து செயல்படுகிறார்கள். முசோலினியும் ஹிட்லரும் இணைந்து ஆட்சியை கட்டுப்படுத்தியதுபோல், இவர்கள் தங்களது அரசியல் நாடகத்தை தீவிரமாக வளர்த்து வருகிறார்கள்!"** என அவர் கடுமையாக கூறினார்.
 
Edited by Siva