வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 6 ஜனவரி 2024 (14:45 IST)

2 முறை ஒத்திவைக்கப்பட்ட திமுக இளைஞரணி மாநாடு எப்போது?. 3 முறையாக தேதி அறிவிப்பு.!!

udhay
புயல் மழை பாதிப்பால் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு வருகிற 21 ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதால் டிசம்பர் 24 ஆம் தேதிக்கு மாநாடு தள்ளிவைக்கப்பட்டது.
 
அதன் பிறகு தென் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. இதில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் அமைச்சர்களும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஈடுபட்டனர். 
 
இதை அடுத்து டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற இருந்த திமுக இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. மாநாடு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
 
இந்நிலையில் திமுக இளைஞரணி மாநாட்டிற்கான தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் வருகிற 21ஆம் தேதி நடைபெறும் என திமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.